சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதை நடிகை ஊர்வசியும் பெற்றனர்.
71வது தேசிய விருதுகள் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வாத்தி படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாசுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், உள்ளொழுக்கு படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசிக்கும் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கிக் கவுரவித்தார்.
அட்லி இயக்கிய ஜவான் படத்திற்காகப் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
இந்த விருதை 12th ஃபெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாஸி உடன் பகிர்ந்து கொண்டார். மேலும், மிசஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்திற்காக நடிகை ராணி முகர்ஜி சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார்.
சிறந்த திரைப்படமாக 12th ஃபெயில் படம் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அப்படத்தின் இயக்குநர் விது வினோத் சோப்ரா அந்த விருதைப் பெற்றுக் கொண்டார். அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.