சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் ஊழல் திமுக அரசை 2026-ம் ஆண்டு மே மாதம் காளி தேவி துவம்சம் செய்வதை அனைவரும் காண்போம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி கொடுத்த நவராத்திரி பரிசு தான் ஜிஎஸ்டி 2.0 என தெரிவித்தார். பொதுமக்கள் பயனடையும் வகையில் ஜிஎஸ்டி மறுவரையரை செய்யப்பட்டுள்ளது என்றும், ஜிஎஸ்டி மறுவரை செய்யப்பட்டதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என கூறினார்.
அன்று மன்மோகன் சிங் அரசு செய்யாததை இன்று மோடி அரசு செய்துள்ளது என்றும், முப்பெரும் தேவிகள் ஆசியுடன் மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையை செய்துள்ளதாகவும் கூறினார்
ஊழல் திமுக அரசை 2026 மே மாதம் காளி துவம்சம் செய்வதை காண்போம் என்றும், திமுக அரசு சிறுபார்மையினரை இழிவுபடுத்தி வருவதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு பணிகள் நடக்க மத்திய அரசே காரணம் என்றும், “பிரதமர் மோடி இருக்கும் திசை நோக்கி வணங்கி முதல்வர் ஸ்டாலின் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.