சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பெற்று கொண்டார்.
இந்திய திரைப்படத்துறையில் சிறப்பாக பணியாற்றும் கலைஞர்களை கவுரவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டிற்காக 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் வாத்தி படத்திற்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளர் விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றார். இதற்கு முன்பு ‘சூரரைப் போற்று’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தேசிய விருது பெற்றிருந்தார்.
‘உள்ளொழுக்கு’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகையாக ஊர்வசி அறிவிக்கப்பட்டிருந்தார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் ஊர்வசி தனது தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.
தமிழில் சிறந்த குறும்படமாக லிட்டில் விங்ஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தது. லிட்டில் விங்ஸ் குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் சரவண மருது சவுந்தரபாண்டின், மீனாட்சி சோமன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்றனர்.