அணுசக்தித்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், வரும் ஆண்டுகளில் எரிசக்தி தயாரிப்புகளில் அமெரிக்காவுடனான வர்த்தகம் அதிகரிக்கப்படும் என தெரிவித்தார். அணுசக்தித்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், எச்-1பி விசா விண்ணப்ப கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது தொழில்நுட்பத் துறையில் உள்ள இந்திய நிபுணர்களை பெரிதும் உலுக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.