ஒரு தேசம், ஒரு கனவு என்ற சிந்தனை மிக முக்கியமானது என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை, ரோட்டரி சங்கம் சாா்பில் ஒரே தேசம்-ஒரே கனவு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்களால் நாம் அனைவரும் வேறுபட்டாலும் ஒரே கனவால் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என கூறினார். 2047ஆம் ஆண்டுக்குள் ஓர் அறிவாா்ந்த, வளமான, முன்னேறிய தேசத்தைக் கட்டமைப்பதே நமது அனைவரின் கனவு எனவும் தெரிவித்தார்.
நம்மைச் சுற்றியுள்ள சவால்கள் சிறியவை அல்ல எனக்கூறிய அவர், சவால்களை சமாளிக்க நாம் ஒவ்வொருவரும் தனித்து குரல் கொடுக்கக் கூடாது என தெரிவித்தார். மேலும், ஒரே தேசம்-ஒரே உறுதி- ஒரே இலக்கு என்பதை நோக்கி நாம் அனைவரும் பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.