தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த இளம் விவசாயி பல லட்சம் ரூபாய் லாபத்தை அள்ளிக் குவிக்கிறார்.
பொள்ளாச்சி என்றாலே தென்னை மரங்களும் இளநீரும் பெயர் போன ஒன்று. அனைத்து மக்கள் மத்தியிலும் பொள்ளாச்சி இளநீர் மற்றும் தேங்காய்க்கு பெரும் வரவேற்பு உண்டு.
கடந்த பத்து வருடங்களாகப் பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் தென்னை மரங்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளானது.
ஆனால் பொன்னாயூரை சேர்ந்த இளம் விவசாயி அரவிந்த் விஜய் என்பவர், வேளாண்மையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று, ஒரு ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து, ஆங்கில வெள்ளரி பயிரிட்டு 120 நாட்கள் இடைவெளியில் 50 டன் வரை உற்பத்தி செய்கிறார்.
சுமார் 40 லட்சம் ரூபாய் வரை செலவானதாகக் கூறும் அரவிந்த் விஜய், இரண்டு ஆண்டுகளுக்கு ஐந்து பேட்ச்சுகள் என 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.