கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு கலை கல்லூரி மாணவரை வகுப்பறைக்குள் புகுந்து தாக்கிய முன்னாள் மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் பார்த்தசாரதி என்ற மாணவனை, முன்னாள் மாணவர்கள் சிலர் வகுப்பறைக்குள் புகுந்து சரமாரியாகத் தாக்கினர்.
இதில் காயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.