தஞ்சை பெரிய கோயில் வாகன நிறுத்துமிடத்தில் குவிந்துள்ள குப்பைகளால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
அங்குள்ள குப்பை தொட்டிகள் சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், குவியும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.