நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்த விலைக்கு நகைகள் வாங்கி தருவதாகக் கூறி நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலர் அந்தோனி ஜார்ஜிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சூர்யா வீட்டில் பணியாற்றிய சுலோச்சனா என்ற பெண், அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர் மற்றும் சகோதரி விஜயலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இதே பாணியில் மேலும் பலரை ஏமாற்றி 2.50 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.