நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ரங்கநாயகி தாயாரை மௌத்தார்கன் வாசித்து வழிபட்டது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவராத்திரி உற்சவத்திற்காக ரங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டுக் கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அப்போது அங்கு வந்த கோயில் யானைகள் ரங்கநாயகி தாயாரை மௌத்தார்கன் வாசித்து வழிபட்டன. இந்த நிகழ்வைக் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்துப் பரவசமடைந்தனர்.