விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பால் அதிகாரிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
கணினி அறையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து பாம்பு ஒன்று உள்ளே நுழைந்தது.
இதனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், சாரை பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.