மடப்புரம் கோயிலில் பேராசிரியை நிதிதாவின் நகை காணாமல் போன வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், மடப்புரம் ஆட்டோ ஸ்டாண்டு சங்க தலைவரிடம் அரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கை விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கோயில் அருகே கல்லூரி பேராசிரியையான நிகிதாவின் நகை காணாமல் போன வழக்கையும் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 15-ம் தேதி இது தொடர்பான விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், வழக்கு தொடர்பாக நேற்று மடப்புரம் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து கோயில் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டின் சங்க தலைவர் கனேந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் வந்த காருக்குள் அமர வைத்துக் கனேந்திரனிடம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.