கார் ரேஸ்களில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 12ம் தேதி வரை இவர் ஸ்பெயினில் 4 கார் பந்தயங்களில் கலந்து கொள்கிறார். இதற்காக அஜித்குமார் ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார்.