ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்குப் போனஸ் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 78 நாட்கள் ஊதியத்தை ரயில்வே ஊழியர்களுக்குப் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகக் கூறினார்.
அதன்படி ரயில்வேயில் பணியாற்றும் 10.9 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்றும், இதற்காக ஆயிரத்து 866 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.