கேரள மாநிலம் கண்ணூர் அருகே சிறுவனை கடித்து இழுத்து செல்ல முயன்ற நரியைத் தாக்கிய சிறுமி, அந்த சிறுவனை காப்பாற்றிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கண்ணூர் மாவட்டம் மட்டுல் பகுதியில் வீட்டருகே சிறுவர், சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்த சிறுவனின் காலை அங்கு வந்த நரி கவ்வியது. தொடர்ந்து சிறுவனை நரி இழுத்து செல்ல முயன்றது.
இதை கண்ட சிறுமி சற்றும் அஞ்சாமல், நரியின் முகத்தில் கடுமையாகத் தாக்கினார். தொடர்ந்து வலி தாங்க முடியாமல் நரி சிறுவனை விட்டு விட்டுஅங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்த வீடியோ காட்சி வெளியான நிலையில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் நரியைப் பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.