நடிகர் ரவி மோகன் வாங்கிய கடனை முறையாகச் செலுத்தாததால் ஈசிஆரில் உள்ள அவரது சொகுசு பங்களாவிற்கு தனியார் வங்கி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
சென்னை ஈசிஆரில் சொகுசு பங்களாவை வாங்கி மனைவியுடன் ரவி மோகன் வசித்து வந்தார். வங்கி கடன் மூலமாகச் சொகுசு பங்களாவை வாங்கிய நிலையில், மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததால் அங்கு ரவி மோகன் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, கடந்த 10 மாதங்களாகக் கடன் தவணையை ரவி மோகன் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் வங்கி நிர்வாகம், அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது. அதில், 60 நாட்களுக்குள் 7 கோடியே 64 லட்சம் ரூபாய் கடன் தொகையைச் செலுத்தவில்லை எனில் சொகுசு பங்களா ஜப்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.