ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த மனுமீது நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுவதாகக் கூறிய நீதிபதி, வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி போலீசார், சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
வழக்கை விசாரித்து சிபிஐ 6 மாதத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதி வேல்முருகன் ஆணையிட்டார்.