சுத்த சைவமான நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு ஆன்லைனில் அசைவ உணவு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடிகை சாக்ஷி அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஸ்விக்கியில் தான் சைவ உணவு ஆர்டர் செய்ததாகவும், ஆனால் அசைவ உணவு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சுத்த சைவமான தான், கவனிக்காமல் அந்த உணவை வாயில் வைத்துவிட்டதாகக் கூறிய சாக்ஷி அகர்வால், ஸ்விக்கியை டேக் செய்து, என் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.