உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில், மாவட்ட கல்வி அலுவலரை பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பெல்டால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சீதாபூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பிரிஜேந்திர குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் மீது மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விளக்கம் அளிப்பதற்காகத் தலைமை ஆசிரியர் பிரிஜேந்திர குமார் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து புகார் குறித்து பிரிஜேந்திர குமார் கல்வி அலுவலரிடம் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அவர் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே கடும் கோபமடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் பிரிஜேந்திர குமார், மாவட்ட கல்வி அலுவலரை பெல்டால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலருக்கு, தலைமை ஆசிரியர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.