என் ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டும், கைதட்டிக் கொண்டும் மட்டுமில்லாமல் உழைத்து மேலே வர வேண்டும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1-ம் தேதி இட்லி கடை திரைப்படம் ரிலீசாகிறது. இதனையொட்டி மதுரையில் திரைப்பட பிரமோஷன் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகரும், இயக்குனருமான தனுஷ், நடிகர்கள் அருண் விஜய், பார்த்திபன், இளவரசன் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய தனுஷ், செல்வராகவனுக்கு 4 வயது இருக்கும் போது, என்னுடைய அம்மா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார் என்றும், ஆனால் பணம் இல்லாததால் ஊரில் இருந்து மதுரைக்கு கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தனது அம்மா நடந்தே வந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
என் ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டும், கைதட்டி கொண்டும் மட்டும் இல்லாமல் உழைத்து மேலே வர வேண்டும் எனவும் நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.