இந்தியாவுடன் மேற்குலக நாடுகள் நட்புறவு கொள்வது மிகவும் முக்கியம் என பின்லாந்து அதிபர் ஸ்டப் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசி ஸ்டப் இந்தியாவைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் மிக நெருக்கமான நட்பு நாடு என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தியா வெளிப்படையாக ஒரு வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ளது என்றும், மிகப்பெரும் பொருளாதாரம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்கத்திய நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம் என்றும் பின்லாந்து அதிபர் ஸ்டப் தெரிவித்துள்ளார். இந்தியாவை, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைத்து பார்க்க மாட்டேன் என்றும் ஸ்டப் கூறியுள்ளார்.