விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கு பயனாளியை வரவழைத்து 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நாராயணன் என்பவர், அப்பகுதியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பட்டா மாறுதல் தொடர்பாக விஏஓ பொன்னைவனத்தை அணுகியுள்ளார்.
பட்டா மாறுதலுக்கு 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் எனவும் திண்டிவனத்தில் நடைபெறும் முகாமில் தன்னை அணுகும்படியும் பயனாளியிடம் விஏஓ பொன்னைவனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பணியாற்றிய விஏஓ பொன்னைவனத்தை நாராயணன் சந்தித்துள்ளார்.
பின்னர் அருகில் உள்ள தேநீர் கடைக்கு வரவழைத்துப் பயனாளியிடம் விஏஓ பொன்னைவனம் பணம் வாங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், விஏஓவை கையும் களவுமாகக் கைது செய்தனர்.