சத்தீஸ்கரில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுக்கள் 71 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாகச் சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.
இதனால் அங்குத் தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் தண்டேவாடா மாவட்டத்தில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுக்கள் 71 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.