பால் பொருளான பன்னீருக்கு முழுமையாக ஜிஎஸ்டி வரி விலக்கு அளித்த மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர்கள், மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசின் நடவடிக்கையால் பால் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதரம் மேம்பட்டுள்ளதாகக் கருத்து தெரிவித்தனர்.
ஜிஎஸ்டி வரி விலக்கால் பன்னீர் விலை குறைந்துள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் மத்தியில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.