ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்திப் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
சூப்பர் சுற்றின் 3வது ஆட்டம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 18 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.