முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவுகணைகளால் குறிவைத்து தாக்கும் அக்னி-பிரைம் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடித்துள்ளது.
தேசிய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைந்து இந்திய ராணுவம் உருவாக்கிய நகரும் திறன் கொண்ட அக்னி-பிரைம் ஏவுகணை, இரண்டாயிரம் கிலோ மிட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.
இந்தச் சோதனை நடத்தப்பட்டதற்கான வீடியோவை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.