தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் கோவை அருகே காப்பகத்தில் உள்ள குழந்தைகளைக் காப்பாளரே கண்மூடித்தனமாகத் தாக்கிய நிலையில் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சர்க்கார் சாமக்குளம் அருகேயுள்ள கோட்டைபாளையம் பகுதியில் GRACE HAPPY HOME TRUST என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்குச் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அங்குள்ள பாதுகாவலர் குழந்தைகளை கம்பு, பெல்ட் உள்ளிட்டவற்றால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குழந்தைகளை அன்பால் அரவணைக்க வேண்டிய காப்பக ஊழியரே இவ்வாறு செயல்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில்,போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.