திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த வளைகுண்டு பகுதியில் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 4வது முறையாக மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.
எனினும் கல்லாவில் இருந்த ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரொக்கத்தை அவர்கள் திருடவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், தடயங்களைச் சேகரித்து, விசாரித்து வருகின்றனர்.