கரூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பொதுமக்கள் பங்கேற்காததால் முகாம் வெறிச்சோடி காணப்பட்டது.
காந்தி கிராமம் சந்தை அருகே உள்ள மைதானத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
எனினும் முகாமில் குறைந்த பயனாளிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் ஏற்கெனவே மனு அளித்தவர்களுக்கே மட்டும் அதிகாரிகள் அதற்கான ஆணைகளை வழங்கினர். இதனால் முகாம் வெறிச்சோடி காணப்பட்டது.