விருதுநகர் அருகே அமேசானில் water flask-ஐ ஆர்டர் செய்த நபருக்கு வந்த பார்சலில் கல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரியாபட்டியை சேர்ந்த ரமா என்பவர் அமேசான் நிறுவனத்தில் 400 ரூபாய் மதிப்பிலான water flask-ஐ ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில் அதற்கான பார்சல் அவரது வீட்டிற்கு வந்தது. பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதில் கல் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ரமா, பார்சலை கொண்டு வந்த நபரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்திடம் கேளுங்கள் எனக் கூறி சென்றுவிட்டார்.