சென்னை எண்ணூரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை 7 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றது.
கத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டுநராகப் பணி புரிந்து வந்த நிலையில் இவர் 5 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து ஒன்றை வாங்கியுள்ளார்.
இது தொடர்பான பரிவர்த்தனையை அறிந்துகொண்ட அமலாக்கத்துறையினர் மோகன் வீட்டிற்கு குழுவாகச் சென்று சோதனை நடத்தினர்.
7 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.