நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்போது, மக்கள்மீதான வரிச்சுமை குறைந்து கொண்டே போகும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், 2017ல் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதன் மூலம் மறைமுக வரியில் மத்திய அரசு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.
இது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத் தக்க நடவடிக்கையெனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தற்போது ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிர்திருத்தங்களுடன், தான் நிற்கப்போவதில்லை என்றும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்கள்மீதான வரிச்சுமை குறைந்து கொண்டே போகும் எனவும் உறுதியளித்தார்.