வீடியோ கேம் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட MARVEL’S WOLVERINE என்ற வீடியோ கேமின், ரத்த களரியான GAME PLAY டிரெய்லர் வெளியாகியுள்ளது.
SONY நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பிளே ஸ்டேஷன், ‘STATE OF PLAY’ நிகழ்ச்சியில், INSOMNIAC GAMES நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட MARVEL’S WOLVERINE என்ற ஆக்ஷன், அட்வென்சர் கேமின் டிரெய்லர் காட்சி வெளியிடப்பட்டது.
சுமார் 2 நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லரில் WOLVERINE கதாப்பாத்திரமான லோகன், தனது அடமாண்டியம் நகங்களைக் கொண்டு எதிரிகளை வெட்டிச் சாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கேமின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள “நான் ஹீரோ இல்லை… நான் WOLVERINE” என்ற வசனம் ரசிகர்களுக்கு அதன் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. WOLVERINE கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுக்க SPARTACUS தொடரின் முன்னணி நடிகரான லியாம் மெகிண்டயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்டிக் உள்ளிட்ட பல மார்வெல் கதாப்பாத்திரங்கள் இந்தக் கேமில் இடம்பெற்றிருப்பார்கள் எனவும், 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தக் கேம் PS-5 -ல் மட்டும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காமிக்ஸில் வரும் WOLVERINE கதாப்பாத்திரத்தின் உண்மை அனுபவத்தை இந்தக் கேமின் மூலம் வீடியோ கேம் பிரியர்கள் உணரவுள்ளதாக INSOMNIAC நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.