குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மலையப்ப சுவாமி தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
இந்த நிலையில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்களுக்குத் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இருவரும் திருமலையில் பக்தர்களுக்கான லாக்கர் அறைகள், மொட்டை அடிக்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட வளாகத்தைத் திறந்து வைத்தனர்.