வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், அதில் தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் 2-வது விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ அறிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாகச் சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில்தான் தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் 2-வது விக்கெட் கீப்பராக இடம் பிடித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு FIRST CLASS கிரிக்கெட்டில் அறிமுகமான ஜெகதீசன், விஜய் ஹசாரே தொடரில் அதிகபட்சமாக 277 ரன்கள் அடித்துள்ளார்.
இது லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் ஒரு தனிநபர் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். மேலும், லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ள நாராயணன் ஜெகதீசனுக்கு, ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின்போது 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட அழைப்பு வந்தது.
ஆனால் அந்தப் போட்டியில் அவர் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் தேர்வாகியுள்ள அவர், வருங்கால இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.