முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெள்ளை காகிதத்தை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் TRB ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வெள்ளை அறிக்கை கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வெள்ளை காகிதத்தை காட்டினார். TRB ராஜாவின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.