சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முடிவு எடுப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு தரப்பு பிரச்சினை தேர்தல் வரை போகாது, அதற்குள் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
பாமகவில் இருதரப்பு என்பது கிடையாது. அவர்கள் வெறும் கும்பல்தான் என்றும் அவர் கூறினார். டெல்லி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தது தொடர்பான கேள்விக்கு அது பரம ரகசியம் என்றும் கூறினார்.