திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 52வயது பெண்ணை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வாசுதேவன்பட்டு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் குமாரி என்பவரை அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.