சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் பள்ளி, கல்லூரி, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குத் தொடர்ந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாக இருந்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றர். இதேபோன்று, டிஜிபி அலுவலகம், ஆளுநர் மாளிகைக்கும் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் 4 குழுக்களாகப் பிரிந்து நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.