தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து காவல் காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தும்பலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதி, தனது 16 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
சிறுமி கர்ப்பமானதை அறிந்த சமூக நலத்துறையினர், போலீசாருக்கு தகவலளித்தனர். இந்தச் சம்பவத்தில் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சிறுமியின் பெற்றோரிடம் காவல் ஆய்வாளர் வீரம்மாள் லஞ்சம் கேட்டுள்ளார்.
50 ஆயிரம் ரூபாயை அவர் லஞ்சமாகக் கேட்டது குறித்து லஞ்ச ஒழித்துறையில் புகாரளிக்கப்பட்டது.
அதன் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வீரம்மாளை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் வீரம்மாளை, பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.