ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகாரளித்துள்ளது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 2-வது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்களான சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரவூப் மீது நடவடிக்கை கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பிசிசிஐ புகார் அளித்துள்ளது.