உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கிய மதரசாவில் கழிப்பறையில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகளைப் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
பஹ்ரைச் மாவட்டத்தின் பஹால்வாரா பகுதியில் உள்ள 3 அடுக்கு கட்டடத்தில் இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் பள்ளி சட்டவிரோதமாக இயங்கி வருவதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது மாடியில் இருந்த கழிவறை பூட்டப்பட்டிருந்த நிலையில் அதனை உடைத்து பார்த்தபோது 40 சிறுமிகள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
9 வயது முதல் 14 வயதுகுட்பட்ட 40 சிறுமிகளை மீட்ட அதிகாரிகள் மதரசா நிர்வாகிகளைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.