திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்பவர் அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது கிஷோர் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் வைத்து அர்ச்சனாவை திருமணம் செய்துள்ளார்.
அர்ச்சனாவை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், கருவைக் கலைக்குமாறு கிஷோரும், அவரது சகோதரியும் மிரட்டுவதாகவும் கோவை மாநகர காவல் நிலையத்தில் அர்ச்சனா புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கிஷோர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றதால் கிஷோரை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.