பிக்பாஷ் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சிட்னி தண்டர் அணிக்கு விளையாட உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலகிய அஸ்வின், கடந்த மாதம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
அவருக்குப் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவரை ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக்பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைக்க 4 அணிகள் முயற்சித்தன.
இந்நிலையில் அஸ்வின், சிட்னி தண்டர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி உள்ளார். இதனை அஸ்வின் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.