கோவை அன்னூர் அருகே உள்ள காப்பகத்தில் சிறுவர்களை தாக்கிய காப்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோட்டைப்பாளையம் பகுதியில் கிரேஷ் ஹாப்பி ஹோம் என்ற ஆதரவற்ற சிறார்கள் முகாம் உள்ளது. இந்தக் காப்பகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றும் செல்வராஜ் என்பவர் சிறுவர்களை அடித்துத் துன்புறுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியால் அங்குச் சென்ற போலீசார், செல்வராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.