சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு நடைபெற்றுள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சென்னையில் பேசியவர்,
” “சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு நடைபெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கல்வி சாதனை விழாவாகத் தெரியவில்லை, பாடல் வெளியீட்டு விழா போன்று இருந்தது என்றும் ”கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்வியில் சிறந்த பேரறிஞர்களா பங்கேற்றனர்? கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பேச வைக்கப்படாதது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பினார்.
“திமுக அரசின் மாடல் திராவிட மாடல் அல்ல, விளம்பர மாடல் என்றும் திமுக அரசுக்குச் செய்தி அரசியல், விளம்பர அரசியல் தவிர வேற என்ன தெரியும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
கல்வியில் சிறந்த தமிழகம் என்றால் எதில் சிறந்து இருக்கிறது, பட்டம் படிப்பு முடித்துவிட்டு வருபவர்களுக்குத் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரியவில்லை என்று சீமான் குறிப்பிட்டார்.