நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் “மக்கள் சந்திப்பு யாத்திரை”யைத்தொடங்குகிறார்.
இதையொட்டி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பொன் பாலகணபதி, கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது யாத்திரையை தொடங்குவது குறித்தும், அதில் கூட்டணி கட்சித் தலைவர்களைப் பங்கேற்க செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.