மாமல்லபுரத்தில் நடந்த விபத்துக்குப் பிறகு திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது டாஸ் என்கிற த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இவர் விபத்துக்குப் பிறகு ஆர். 23 என்கிற படத்தில் மட்டும் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது டாஸ் படத்தில் அவர் கதாநாயகியாகக் களமிறங்குகிறார்.
படத்திற்கான பூஜை மற்றும் தொடக்க விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
சகு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் டிவி புகழ் யோகி, ஷன்னா, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர், ரத்தன் மௌலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த ஆண்டு இறுதியில் டாஸ் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.