அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காண்பித்ததை போலவே, திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
மாணவர்களுக்கு விடுமுறை அளித்து, சுய விளம்பரத்திற்காக அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.
நடிகர்களை அழைத்து வந்து அரசு விளம்பரம் தேடுகிறது என்றும் முதலமைச்சர் ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக் கூறியதற்கு பதில் இல்லை என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காண்பித்ததை போலவே, திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.