நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் BSNL 4ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் 4ஜி சேவையை வழங்குவதற்கு 620 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 188 வருவாய் கிராமங்களிலும் வன பகுதிகளில் உள்ள 21 கிராமங்களிலும் 209 இடங்களில் 4ஜி செல்போன் டவர்கள் நிறுவப்பட உள்ளன.